TNPSC Thervupettagam

ஆபத்சஹாயேஸ்வரர் கோவில்

December 10 , 2024 13 days 112 0
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துக்காட்சி எனுமிடத்தில் உள்ள சுமார் 1,300 ஆண்டுகள் மிகவும் பழமையான ஆபத்சகாயேஸ்வரர் கோயில், யுனெஸ்கோ அமைப்பின் 2023 ஆம் ஆண்டு சிறப்பு விருதினைப் பெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • விக்ரம சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோரால் கட்டப்பட்டதாக நம்பப் படும் இந்த கோவிலில் முன்பு ஐந்து பிரகாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
  • இந்த ஊர் ஆனது விக்ரம சோழீஸ்வரம் என்றும் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும் அழைக்கப் பட்டது.
  • சரபேஸ்வரருக்கு முதன்முதலில் சிலையை நிறுவியவர் குலோத்துங்க மன்னராவார்,  அதனால்தான் இந்த தெய்வம் ஆதி சரபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
  • சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலான கோவில்களைப் புனரமைக்கவும் புதுப்பிக்கவும் தமிழக அரசு ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்