TNPSC Thervupettagam

ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரியத் தளங்கள்

October 17 , 2023 406 days 304 0
  • யுனெஸ்கோ அமைப்பானது கியுவ் மற்றும் எல்விவ் ஆகிய உக்ரேனிய நகரங்களில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியத் தளங்களை "ஆபத்திலுள்ள" உலகப் பாரம்பரியத் தளங்கள் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.
  • இது 1,157 தளங்களைக் கொண்ட யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இருந்து இந்தத் தளங்களை விலக்குவதற்கான முதல் படிநிலையாகும்.
  • இது புதிய அவசரகால நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான கூடுதல் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கான வாய்ப்பினை உருவாக்குகிறது.
  • தற்போதைய கியுவ் நகரில் உள்ள செயிண்ட் சோபியா கதீட்ரல் என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அந்நகரத்தின் மிகவும் பிரபலமான அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்.
  • போலந்து எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள மேற்கு உக்ரேனிய நகரமான எல்விவ், இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது.
  • இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மையமானது 1998 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்