TNPSC Thervupettagam

ஆபத்தில் உள்ள உலகப் பாரம்பரியத் தளம்

March 2 , 2023 637 days 334 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, உக்ரைனின் கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஓர் உத்திசார் துறைமுக நகரமான ஒடேசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையத்தினை ஆபத்தில் உள்ள உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
  • ரஷ்யாவின் படையெடுப்பின் மூலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இதற்கு சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நாடுவதற்கான வாய்ப்பினையும் இது ஏற்படுத்தியுள்ளது.
  • உக்ரைன் மீது ரஷ்யா தனது படையெடுப்பினைத் தொடங்கியதில் இருந்து ஒடேசா மீது பலமுறை குண்டு வீசித் தாக்கியுள்ளது.
  • ஒடேசாவின் நுண்கலை அருங்காட்சியகம் ஆனது 1899 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
  • இந்த நகரம் ஆனது 18 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், கையகப்படுத்தப்பட்ட ஒட்டோமான் கோட்டை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்