TNPSC Thervupettagam

ஆபத்து நிலையில் உள்ள உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியல்

December 4 , 2022 595 days 291 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) மற்றும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய மையம் (WHC) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையானது, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந்தடுப்பு பவளத் திட்டுகளின் (GBR) நிலை குறித்து கவலைக்கிடமான தகவலைத் தெரிவித்தது.
  • அந்த அமைப்புகள் "ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் இதனைச் சேர்க்க வேண்டும்" என்று பரிந்துரைத்துள்ளன.
  • இது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் அமைந்துள்ளது.
  • பெருந்தடுப்பு பவளத் திட்டு என்பது 2,900 தனிப்பட்ட திட்டுகள், 900 தீவுகள் மற்றும் தோராயமாக 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பாகும்.
  • இது உலகின் மிகப்பெரிய பல்லுயிர் மையங்களில் ஒன்றாகும் என்பதோடு, உலகின் மிகப்பெரிய கார்பன் உட்கவர் அமைப்புகளில் ஒன்றாகவும் இது உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்