ஆப்கானிய இந்து மற்றும் சீக்கியச் சமூகத்தைச் சேர்ந்த குடிமக்களுக்குச் சொத்து உரிமையை மீண்டும் வழங்குவதற்கு தாலிபன் ஆட்சி முடிவு செய்துள்ளது.
காபூல் நகரில் முந்தைய ஆட்சிக் காலத்தில் போர்க்குடி மக்களால் கைப்பற்றப்பட்ட தனியார் நிலத்தின் பல உரிமைகளை அந்தந்த உரிமையாளர்களுக்குத் திருப்பித் தருவதை உறுதி செய்வதற்காக என்று அந்த நாட்டின் அரசானது ஓர் ஆணையத்தினை அமைத்துள்ளது.
சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தோன்றிய போர்க்குடி தலைவர்கள் கலாச்சாரம் ஆகிய காலத்தில் தொடங்கி பல தசாப்தங்களில் அவர்கள் தங்களது சொத்துக்களை இழந்தனர்.