TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மாலத்தியான் ஏற்றுமதி

January 28 , 2024 173 days 302 0
  • 40,000 லிட்டர் மாலத்தியான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஈரானின் சாபஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
  • வெட்டுக்கிளி தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தப் பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்படுகிறது.
  • மாலத்தியான் பூச்சிக் கொல்லியானது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வறண்ட பகுதிகளில் பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான பூச்சிக்கொல்லி ஆகும்.
  • இந்தியாவின் இந்த உதவியானது, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா நாடுகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
  • ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள்ளேயே மேற்கொள்ளப்படும் கோதுமை விநியோகத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்துடன் இந்திய அரசாங்கம் கூட்டு சேர்ந்துள்ளது.
  • இந்தக் கூட்டாண்மையின் கீழ், ஆப்கானிஸ்தானில் உள்ள UNWFP மையங்களுக்கு இந்தியா 47,500 மெட்ரிக் டன் கோதுமையை உதவியாக வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்