ஆப்பிரிக்கச் சிறுத்தை – இந்தியாவிற்குக் கொண்டு வருதல்
January 31 , 2020 1763 days 752 0
ஆப்பிரிக்கச் சிறுத்தையை இந்தியாவிற்குக் கொண்டு வர அனுமதியளித்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சிறுத்தையானது (அசினோனிக்ஸ் ஜுபாடஸ்) சோதனை அடிப்படையில் இந்தியாவிற்குக் கொண்டுவரப் படுகின்றது.
ஆப்பிரிக்கச் சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ - பால்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் வைத்து வளர்க்கப்படும் என்று தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமானது (National Tiger Conservation Authority - NTCA) இதற்கு முன்பு இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த இடமாற்றத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றமானது (International Union for Conservation of Nature - IUCN) “தடையின்மை அனுமதியை” வழங்கியுள்ளது.
இந்தியாவில் வேட்டையாடப்பட்டு அழிந்துபோன ஒரே பாலூட்டி சிறுத்தை மட்டுமே ஆகும்.
IUCN நிலை: “பாதிக்கப்படக்கூடிய இனங்கள்”.
புவியியல் வாழிடம்: வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஈரானில் உள்ள ஒரு சில பகுதிகள்.
இந்தியாவில் சிறுத்தை: 1947 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த இனம் அழிந்துவிட்டது.