TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கப் புளூம் வெப்ப அலை

May 25 , 2023 555 days 328 0
  • ஆப்பிரிக்கப் புளூம் எனப்படும் உயர் அழுத்தம் சார்ந்த நிகழ்வின் ஏற்பட உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளதால், ஐக்கியப் பேரரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான வெப்ப அலை நிலையை எதிர் கொள்ள உள்ளது.
  • இது இதுவரை பதிவாகாத அளவிற்கான வெப்பநிலையை ஏற்படுத்தும்.
  • இந்த உயர் அழுத்த அமைப்பானது, மே மாத இறுதிக்குள் ஐக்கியப் பேரரசில் மிகவும் கடுமையான வெப்ப நிலைகளை ஏற்படுத்த உள்ளது.
  • அந்த சமயங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
  • இந்த வானிலை நிகழ்வானது, சஹாரா பாலைவனத்திலிருந்து ஐரோப்பாவினை நோக்கி வெப்பமான காற்றின் திரளான நகர்வாக வகைப்படுத்தப் படுகிறது.
  • இது அதிகபட்ச உயர் வெப்பநிலை நிலவும் நீண்ட காலகட்டத்தினைப் பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கச் செய்கிறது.
  • வளிமண்டலச் சூழ்நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் இதன் தீவிரம் மாறு படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்