இந்தியாவின் ஆப்பிரிக்காவுடனான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே மின்னணு வலையமைப்பை நிறுவுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை (TCIL - Tele Communications Consultants India Ltd) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மின்னணு வித்யபாரதி மற்றும் மின்னணு ஆரோக்கியபாரதி வலையமைப்புத் திட்டமானது இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை அளிக்கும்.
இத்திட்டத்தின் நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை ஆப்பிரிக்காவின் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைப்பதன் மூலம் தரமான தொலைதூர கல்வி மற்றும் தொலைதூர மருத்துவம் அளிப்பதாகும்.