TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க கண்ட இலவச வர்த்தகப் பகுதி

March 24 , 2018 2441 days 766 0
  • உலகின் மிகப்பெரிய இலவச வர்த்தக வட்டாரங்களில் ஒன்றாக ஆப்பிரிக்க கண்டத்தின் இலவச வர்த்தகப் பகுதியை உருவாக்குவதற்காக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 55 உறுப்பினர்களில் 44 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • ருவாண்டாவின் கிகாலியின் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கையெழுத்தான ஒப்பந்தம் இலவச வர்த்தகப் பகுதிக்கான சட்டப்படியானக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
  • தனிப்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் அவைகளின் உள்நாட்டு நடைமுறைகளின் படி உறுதி செய்த (ratification) பின்னர் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
  • மிகவும் அதிக மக்கள் தொகை கொண்டதும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரியப் பொருளாதார நாடுமான நைஜீரியா உட்பட மொத்தம் 10 நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
  • இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், உலக வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்டதிலிருந்து பங்களிப்பு நாடுகளின் (Participatory Countries) அடிப்படையில் மிகப்பெரிய இலவச வர்த்த பகுதி என்ற நிலையை ஆப்பிரிக்க கண்டத்தின் இலவச வர்த்தகப் பகுதி பெறும்.
  • ஆப்பிரிக்க நாடுகளின் அரசுத் தலைமைகள் கண்ட இலவச வர்த்தக பகுதியை (Continental Free Trade Area) ஏற்படுத்துவதற்காக 2012ல் ஒப்புக் கொண்டதுடன் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தினை அதிகரிக்க 2015ல் பேச்சுவார்த்தையைத் தொடங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்