திருவண்ணாமலை மீன்வளத் துறையானது ஆப்பிரிக்க கேட் ஃபிஷ் (African catfish) வகை மீன்களை வளர்ப்பதற்குத் தடை விதித்தும் அதை வளர்ப்பதைக் குற்றமாகவும் அறிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கும் வகை உயிரினமான இது மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வளரக்கூடியது. மேலும் இது உள்நாட்டு நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமாகும்.
ஆப்பிரிக்க கேட்ஃபிஷ் வகையானது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை தாயகமாகக் கொண்டது. இது நன்னீர் ஏரிகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நகர்ப்புற கழிவுநீர் அமைப்புகளில் வாழக்கூடியது ஆகும்.