இது இந்திய அரசின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் ஒரு தொழில்துறை அமைப்பாகும்.
ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் வாரியமானது (OFB - Ordnance Factories Board) உலகில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஆகும். மேலும் இது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மிகப் பழமையான அமைப்பாகும்.
இந்த வாரியங்கள் சிறிய ஆயுதங்கள், ஏவுகணைகள், ராக்கெட் ஏவுகணைகள், ரசாயனங்கள், வெடிபொருட்கள், சுரங்கங்கள், கையெறி குண்டுகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்கின்றன.
இது பெரும்பாலும் "பாதுகாப்பின் நான்காவது தூண்" என்றும் இந்தியாவின் "ஆயுதப் படைகளுக்கு பின்னால் இயங்கும் படை" என்றும் அழைக்கப்படுகிறது.
OFB ஆனது உலகில் 37வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் ஆசியாவில் 2வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் விளங்குகின்றது.
டச்சு ஆஸ்டெண்ட் என்ற நிறுவனமானது மேற்கு வங்காளத்தில் இச்சாபூரில் துப்பாக்கி தூள் தொழிற்சாலையை நிறுவிய 1712 ஆம் ஆண்டு அன்று முதலாவது இந்திய ஆயுதத் தளவாட தொழிற்சாலையானது தொடங்கப் பட்டது.
1801 ஆம் ஆண்டில், கல்கத்தாவின் காசிப்போரில் துப்பாக்கி வண்டி நிறுவனமானது நிறுவப் பட்டது.
இது தற்பொழுது வரை செயல்படும் இந்தியாவின் மிகப் பழமையான ஆயுதத் தளவாடத் தொழிற்சாலையாகும்.
தற்பொழுது நாட்டில் 41 ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் உள்ளன.