TNPSC Thervupettagam

ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் தினம் – மார்ச் 18

March 22 , 2021 1257 days 433 0
  • இந்தியாவின் பழமையான ஆயுதத் தளவாட தொழிற்சாலையின் உற்பத்தி 1802 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று தொடங்கப்பட்டது.
  • இது கொல்கத்தாவிலுள்ள காசிப்பூரில் அமைந்துள்ளது.
  • ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் வாரியம் (Ordnance Factory Board – OFB) ஆனது உலகில் 37வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் ஆசியாவில் 2வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் இந்தியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் விளங்குகிறது.
  • OFB ஆனது “பாதுகாப்பின் நான்காவது தூண்” என்றும் “இந்திய ஆயுதப் படைகளுக்குப் பின்னால் இயங்கும் படை” என்றும் அழைக்கப்படுகிறது.
  • OFB ஆனது இந்திய அரசின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.
  • இந்திய ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் இந்திய இராணுவப்படை, இந்திய கடற்படை, இந்திய வான்படை ஆகிய முப்படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி வருகிறது.
  • OFB ஆனது 1775 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்