TNPSC Thervupettagam

ஆயுதப் படையின் மகளிர்களுக்கு மகப்பேறு விடுப்பு

November 9 , 2023 255 days 261 0
  • இராணுவத்தில் உள்ள மகளிர் வீராங்கனைகள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீராங்கனைகளுக்கு அவர்களது உயர் அதிகாரிகளுக்கு இணையாக மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான விதிகளை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிதலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போது முப்படைகளில் உள்ள மகளிர் அலுவலர்கள், இயல்பிற்கு மாறான சந்தர்ப்பங்களில் ஊதியம் இன்றி ஒரு மாத விடுப்பு நீட்டிப்புடன் கூடிய 180 நாட்கள் மகப்பேறு விடுப்பினைப் பெறத் இனி தகுதியுடையவர்கள் ஆவர்.
  • கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு போன்ற சூழ்நிலைகளில் 30 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்.
  • மகளிர் அலுவலர்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் 180 நாட்கள் விடுப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இதுவரை, இந்திய விமானப்படை அல்லது கடற்படையில் மகளிர் விமானப் போர் வீரர்களோ அல்லது மாலுமிகளோ இல்லை.
  • கடந்த ஆண்டு அரசாங்கம் அக்னிபாத் இராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்த பிறகு, இரு படைப் பிரிவுகளும் மகளிரை அவற்றின் பதவிகளில் சேர்க்கத் தொடங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்