தேசிய சுகாதார நிறுவனத்தின்படி, ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில் குஜராத் மாநிலமானது இந்த திட்டத்தை சிறந்த செயலாக்கம் புரிந்த மாநிலமாக உருவெடுத்து இருக்கின்றது.
ஏற்கனவே 2012 ஆம் ஆண்டிலிருந்து இதனையொத்த முக்கிய மந்திரி அம்ருதம் (MA Yojana) என்ற திட்டத்தை செயல்படுத்தி வந்தது குஜராத்தின் வெற்றிக்கான ஒரு காரணமாகும்.
தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் சத்தீஸ்கர் மூன்றாவது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவையும் உள்ளன.