2018 செப்டம்பர் 6-ம் தேதி ஜம்மூவில், ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ வசதிகளை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் என்ற அளவில் மாற்றிக் கொள்ளக்கூடிய (Portal) மருத்துவ வசதியை அளிக்க எண்ணுகின்றது. மேலும் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு பயனாளி நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் கட்டணமில்லாத சிகிச்சை வசதியை பெற அனுமதிக்கப்படுவார்.
இத்திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி நாடு முழுவதும் பிரதமரால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.