TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி

April 1 , 2018 2431 days 749 0
  • மத்திய அரசின் லட்சியத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்துபூஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிலிப்பைன்ஸின் மணிலாவிலுள்ள ஆசிய மேம்பாட்டு வங்கியின் கிழக்கு ஆசியத் துறையின் தலைவராக (Director General of East Asia Department) பணியாற்றி வந்த இந்து பூஷன் தற்போது தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கான CEO-வாக 2 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த சுகாதாரத் திட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவ சிகிச்சை யைப் பெற ஆண்டிற்கு ரூ.5 லட்சம் அளவிற்கு நிதி உதவியை அளிக்கும். இந்த சுகாதாரத் திட்டம் 2ஆம் மற்றும் 3ம் கட்ட மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற உதவி புரியும்.
  • 2011ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலான ஏழை மற்றும் அடிமட்ட நிலையிலுள்ள 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ உதவி புரிவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்