2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று இந்திய அரசினால் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா அல்லது PM-JAY என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.
PM-JAY திட்டம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
முறையான மருத்துவ வசதிகளை வாங்க முடியாத கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சுகாதார நலன்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது உலகின் மிகப்பெரிய ஒரு சுகாதாரத் திட்டமாகும்.
இது சுமார் 10.74 கோடிக்கும் அதிகமான அளவில் ஏழ்மை மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு வழங்குகிறது.