TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் – ஓடிஸா

January 17 , 2025 5 days 60 0
  • ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) என்ற திட்டத்தினை அமல்படுத்தியுள்ள 34வது மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
  • இதுவரையில், ஒடிசாவும் இதர இரண்டு மாநிலங்களும் இந்தத் திட்டத்தினை இன்னும் செயல்படுத்தாமல் இருந்தன.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டமானது, ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் இரண்டு திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
  • முதலாவது திட்டமானது, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம், இரண்டாவது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகும்.
  • இந்தத் திட்டம் ஆனது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் நோயறிதலுக்கான செலவுகளுக்கும், மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட பிறகு 15 நாட்கள் வரையிலான மருந்துச் செலவுகளுக்குமான சில ஆதரவுகளை உள்ளடக்கியது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் உட்பட 27 வகையான சிறப்பு மருத்துவத் துறைகளில் தோராயமாக 2,000 சிகிச்சை முறைகள் சேர்க்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்