TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆரோக்யஸ்ரீ

May 26 , 2021 1188 days 592 0
  • ஆய்ஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டி தேசிய சுகாதார வாரியமானது தெலுங்கானா அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • தெலுங்கானா அரசானது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை ஆரோக்யஸ்ரீ எனும் தனது மாநிலத் திட்டத்துடன் இணைத்துக் கொண்டுள்ளது.
  • அந்த இணைக்கப்பட்ட திட்டத்தின் புதிய பெயர் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா ஆரோக்யஸ்ரீ என்பதாகும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தெலுங்கானா அரசு அமல்படுத்துவதோடுச் சேர்த்து தற்போது 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்துகின்றன.
  • இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக வேண்டி ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சுகாதார நல சேவை வழங்கப்படும்.
  • தனது பிரத்தியேக திட்டத்தைக் கொண்டிருக்கும் காரணத்தினால் மேற்கு வங்க மாநிலமானது இத்திட்டத்தை நிறைவேற்றுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்