TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத்

March 23 , 2018 2442 days 1629 0
  • பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை (Ayushman Bharat — National Health Protection Mission : AB-NHPM) தொடங்க மத்திய கேபினெட் அனுமதியளித்துள்ளது.
  • தற்போது நடைமுறையிலிருக்கும் ராஷ்டிரிய சுவஸ்தய பீம யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
  • இத்திட்டம் 2011ஆம் ஆண்டு தேசிய சமூக சாதி வாரி கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில், ஏழை மற்றும் அடிமட்ட நிலையிலுள்ள 10 கோடிக்கும் மேலான குடும்பங்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டது.
  • மாநிலங்கள் இத்திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்காக மாநில சுகாதார நிறுவனம் ஒன்றை அமைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலும் சுகாதார அமைப்பை அமைக்கவும் அவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பு வரும் நாட்களில் அமைக்கப்படும்.
  • வலுவான, மட்டுப்படுத்தக் கூடிய மற்றும் இணைந்து பயன்படுத்தப்படும் (Robust, Modular, Interoperable) தகவல் தொழில்நுட்பத் தளத்தை செயல்படுத்த நிதி ஆயோக்குடன் இத்திட்டம் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த IT தளம் காகிதமற்ற மற்றும் நாணயமற்றப் பரிவர்த்தனைகளுக்கு உதவி புரியும்.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கும் கொள்கை வழிகாட்டுதல்களை அளிப்பதற்கும் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டக் குழு உச்ச பட்ச அமைப்பாக அமைக்கப்படும். இதன் தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் செயல்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்