TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை

November 3 , 2024 66 days 194 0
  • மத்திய அரசானது, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் அரசாங்கத்தின் முதன்மையான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் கிடைக்கப் பெறும் வகையில் அந்தத் திட்டத்தின் பயனாளர் வரம்பினை விரிவுபடுத்தியுள்ளது.
  • இந்த முதியோர்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை வழங்கப்படும்.
  • அவர்களின் நிதி நிலை அல்லது வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இந்த விரிவாக்கப்பட்டத் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும்.
  • ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை ஆனது, ஏழ்மை நிலையில் உள்ளவரோ அல்லது நடுத்தர வர்க்கத்தினரோ அல்லது மேல்நிலை வர்க்கத்தினரோ என எந்தவித வருமான வரம்புமின்றி அனைவருக்குமானதாகும்.
  • PMJAY என்ற திட்டமானது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆகிய மருத்துவ சிகிச்சைகளுக்கு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சுகாதாரக் காப்பீட்டினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் மக்கள்தொகையில் 40% பங்கினை கொண்ட அடிமட்ட நிலையில் உள்ள 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 கோடி பயனாளிகளை இது உள்ளடக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்