புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக AYUSH QOL-2C எனும் குறியிடப்பட்ட மருந்தின் (coded drug) மேம்பாட்டை ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு (Central Council for Research in Ayurvedic Sciences - CCRAS) துவங்கியுள்ளது.
மார்பகப் புற்றுநோயாளிகளில் இம்மருந்திற்கான மருத்துவ ஆய்வுகளை ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு மேற்கொண்டுள்ளது.
CCRAS ஆனது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் (Ministry of AYUSH) கீழ் செயல்படுகின்ற ஓர் தன்னாட்சியுடைய அமைப்பாகும் (Autonomous body).
இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
ஆயுர்வேதம் மற்றும் சோவா – ரிக்பா மருத்துவ முறைகளில் (Sowa-Rigpa system of medicine) அறிவியல் வழியிலான ஆராய்ச்சிகளின் மேம்பாட்டிற்கும், ஒருங்கிணைப்பிற்கும், மருந்துப் பொருட்களின் கூட்டுச் சேர்ப்பிற்கும் (formulation), ஊக்குவிப்புக்கும் ஆயுஷ் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் உச்ச அமைப்பே ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு ஆகும்.