TNPSC Thervupettagam
April 7 , 2018 2423 days 795 0
  • புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக AYUSH QOL-2C  எனும் குறியிடப்பட்ட மருந்தின் (coded drug)  மேம்பாட்டை ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு   (Central Council for Research in Ayurvedic Sciences - CCRAS)  துவங்கியுள்ளது.
  • மார்பகப் புற்றுநோயாளிகளில் இம்மருந்திற்கான மருத்துவ ஆய்வுகளை ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு  மேற்கொண்டுள்ளது.
  • CCRAS ஆனது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் (Ministry of AYUSH) கீழ் செயல்படுகின்ற ஓர் தன்னாட்சியுடைய அமைப்பாகும் (Autonomous body).
  • இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
  • ஆயுர்வேதம் மற்றும் சோவா – ரிக்பா மருத்துவ முறைகளில் (Sowa-Rigpa system of medicine) அறிவியல் வழியிலான ஆராய்ச்சிகளின் மேம்பாட்டிற்கும், ஒருங்கிணைப்பிற்கும், மருந்துப் பொருட்களின் கூட்டுச் சேர்ப்பிற்கும் (formulation), ஊக்குவிப்புக்கும்  ஆயுஷ் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் உச்ச அமைப்பே   ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்