சுற்றுச்சூழல் அனுமதி கோருவதில் இருந்து ஆய்வு துளையிடுதலை மேற்கொள்ள விரும்பும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.
இதற்கான அனுமதி என்பது கரையோர மற்றும் கடற்பரப்பில் துளையிடுதல் ஆய்வுகளுக்கானது.
இந்த செயல்முறையானது ஒரு சுற்றுச்சூழல் ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்தது.
இது கடலில் பல ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி, நில அதிர்வு ஆய்வுகளை நடத்துகின்றது.
இன்று வரையிலும், பிரிவு “A” வகையைச் சேர்ந்த ஆய்வுகள் மிக அதிக அளவிலான சுற்றுச்சூழல் ஆய்வுக்குத் தகுதியானவை என அழைக்கப் படுகின்றன.
திட்ட ஆதரவாளர்கள் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஒரு மதிப்பீட்டுத் அறிக்கையைத் தயாரித்து, அவை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நிபுணர்களின் குழுவால் ஆராயப்பட அவ்வகை ஆய்வுகள் வேண்டுகின்றன.