TNPSC Thervupettagam

ஆரஞ்சு நிறமாக மாறும் அலாஸ்கா நதிகள்

June 3 , 2024 174 days 253 0
  • அலாஸ்காவில் சுத்தமான, தெளிவான நீல நிறத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகள் உருகும் நிலத்தடி உறைபனியினால் வெளியிடப்படும் நச்சு உலோகங்கள் காரணமாக துருப்பிடித்த ஆரஞ்சு நிறமாக மாறி வருகின்றன.
  • இரும்பு, துத்தநாகம், தாமிரம், நிக்கல் மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் நிறமாற்றம் மற்றும் தெளிவின்மை ஏற்படுகிறது.
  • இதன் சில பகுதிகளில், வினிகரின் அமிலத் தன்மையைப் போலவே pH அளவு 2.3 ஆகக் குறைந்துள்ளது.
  • ஆர்க்டிக் பகுதிகள் ஒட்டு மொத்த உலகத்தை விட நான்கு மடங்கு வேகமாக வெப்பம் அடைகின்றன.
  • இதன் விளைவாக வட அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமையான ஆறுகளில் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்