சத்தீஸ்கரில் அச்சுறுத்தப்படுதல் நிலையில் உள்ள அரிய வகை ஆரஞ்சு நிற வௌவால் தென்பட்டுள்ளது.
'வர்ணம் பூசப்பட்ட வெளவால்' என்றும் அழைக்கப்படுகின்ற இந்த விலங்கானது, பிரகாசமான ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற இறக்கைகளால் தனித்து வகைப்படுத்தப் படுகிறது.
இந்தப் பிரகாசமான ஆரஞ்சு நிற வௌவால் ஆனது, பாஸ்தார் மாவட்டத்தில் அமைந்து உள்ள கங்கர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில், கடந்த சில ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தென்பட்டது.
இந்தத் தேசியப் பூங்காவானது, அதன் சுண்ணாம்புக் கற்களால் ஆன குகைகளுக்குப் புகழ் பெற்றதோடு, இது வெளவால்களுக்கு உகந்த வாழ்விடத்தையும் வழங்குகிறது.
'கெரிவௌலா பிக்டா' என்ற அறிவியல் பெயரினைக் கொண்ட இந்த வர்ணம் பூசப் பட்ட வௌவால் இனமானது "அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள" இனமாகும்.
வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இவை பொதுவாகக் காணப் படுகின்றன.