மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) ஆனது தற்போது 20 முக்கிய குறிகாட்டிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப் படவுள்ளன.
இது அவற்றின் செயல்திறனின் அளவை மதிப்பிடுவதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களையும் கண்காணிக்கும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
தமிழகத்தின் சுகாதார நிறுவனங்களுக்கு இது போன்ற ரீதியிலான தரவரிசைப் படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரவரிசைப்படுத்துவதன் நோக்கமானது சுகாதார சேவை வசதிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஒரு அகநிலை மதிப்பாய்வுக்குப் பதிலாக ஒரு புறநிலை (உண்மையான) மதிப்பீட்டு வழிமுறையை மேற்கொள்வதாகும்.