TNPSC Thervupettagam

ஆரவல்லி பசுமை மண்டல உருவாக்கத் திட்டம்

March 30 , 2023 611 days 330 0
  • காடுகள் வளர்ப்பு மூலம் சுமார் 1,400-கி.மீ. நீளம் மற்றும் ஐந்து கி.மீ. அகலம் கொண்ட ஒரு பசுமையான மண்டலத்தினை உள்ளடக்கிய வகையிலான தனது பசுமை மண்டல உருவாக்கத் திட்டத்தினை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
  • இது ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள ஓர் இடையக மையமாக இருக்கும்.
  • இது குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லியின் சில பகுதிகளை உள் அடக்கியது ஆகும்.
  • இந்த உயர் இலட்சியமிக்கத் திட்டமானது புதர்த் தாவரங்கள் நிறைந்த நிலம், தரிசு நிலம் மற்றும் சேதமடைந்த வன நிலங்களில் பூர்வீக மரங்கள் மற்றும் புதர்ச் செடிகளை நடுவதை உள்ளடக்கியதாகும்.
  • இது தார் பாலைவனமானது கிழக்கு நோக்கி விரிவடைவதைத் தடுக்கும்.
  • நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி வரை வரும் தூசிக்கு இந்தப் பசுமை மண்டலம் ஒரு தடுப்பாக செயல்படும்.
  • முழு ஆரவல்லித் தொடரின் ஐந்து கி.மீ. இடையக மண்டலம் ஆனது 6.3 மில்லியன் ஹெக்டேர் (Mha) நிலப் பரப்பினை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்