TNPSC Thervupettagam

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் புள்ளி விவரம் மற்றும் குறிகாட்டிகள் 2019-20

May 6 , 2020 1572 days 556 0
  • இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST - Department of Science and Technology) கீழ் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மைத் தகவல் மையத்தினால் (NSTMIS - National Science and Technology Management Information) 2018 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வை அடிப்படையாகக் கொண்டதாகும். 
  • R&D துறையில் (Reseaech & Development) இந்தியாவின் மொத்தச் செலவினம் 2008 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று மடங்காக உயர்ந்து உள்ளது.
  • ஆராய்ச்சி சார்ந்த வெளியீடுகள் அதிகரித்ததன் மூலம், உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
  • அதற்கான இரண்டு முக்கியமான பங்களிப்புகள் DST (63%) மற்றும் மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறை (14%) ஆகியவையாகும்.
  • அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.
  • மேலும் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் தலா R&D செலவினமானது தனிநபர் வாங்கும் சக்தி திறன் அடிப்படையில் 2007-08 ஆம் ஆண்டில் 29.2 அமெரிக்க டாலரிலிருந்து 2017-18 ஆம் ஆண்டில் 47.2 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
  • இந்தியா 2017-18 ஆம் ஆண்டில் R&D மீது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% அளவிற்குச் செலவிட்டது.
  • பிரிக்ஸ் நாடுகளிடையே, பிரேசில் 1.3%த்தையும் ரஷ்யக் கூட்டமைப்பு 11%த்தையும் சீனா 2.1%த்தையும் தென் ஆப்பிரிக்கா 0.8%த்தையும் செலவிடுகின்றன.
  • உலகின் குடியிருப்பாளர் காப்புரிமைத் தாக்கல் நடவடிக்கையில் இந்தியா 9வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின்படி, இந்தியாவின் காப்புரிமை அலுவலகமானது உலகின் காப்புரிமைத் தாக்கல் செய்யும் அலுவலகங்களிடையே 7வது இடத்தில் உள்ளது.
  • R&D துறையில் பெண்களின் பங்களிப்பானது 13%லிருந்து 24% ஆக அதிகரித்து உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்