TNPSC Thervupettagam

ஆரே ஒதுக்கப்பட்ட காடுகள்

September 7 , 2020 1450 days 770 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவிற்கு அருகில் உள்ள ஆரே பகுதியின் 600 ஏக்கர் நிலத்தைக் காடுகளாக ஒதுக்க அறிவித்துள்ளது.
  • இது உலகில் எந்தவொருப் பெருநகரங்களின் எல்லைக்குள்ளும் அமைந்துள்ள ஒரு விரிவான வனப் பரப்பின் முதலாவது நிகழ்வு என்று அம்மாநில அரசு கூறி உள்ளது.
  • காப்புக் காடுகளானது அந்தக் காடுகளுக்குப் பல்வேறு வகையான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப் படுதல் என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தக் கூறானது ஆங்கிலேய ஆட்சியின் போது இந்திய வனச் சட்டம், 1927 என்ற சட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • காப்புக் காடுகளில் வேட்டையாடுதல், மேய்த்தல் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள், குறிப்பிட்ட ஆணைகள் விதிக்கப் பட்டால் தவிர, மற்றபடி தடை செய்யப் பட்டுள்ளன.
  • காப்புக் காடுகளானது அந்தந்த மாநில அரசுகளினால் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் ஆகியவை மத்திய அரசினால் அறிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்