உணவு மற்றும் வேளாண் அமைப்பானது சமீபத்தில் “மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியப் பயன்களுக்கான ஆரோக்கியமான உணவுகளில் பல்வேறு நிலம்வாழ் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவின் ஒரு பங்களிப்பு” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறிகாட்டிகளின் போக்குகள், 2025 ஆம் ஆண்டிற்குள் அடைவதெற்கென உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட பல உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை அடைவதற்கான ஒரு பாதையில் உலகம் தற்போது இல்லை என்பதைக் காட்டுகிறது.
ஆரோக்கியமான உணவு முறைகளுக்குள், நிலவாழ் விலங்குகளிலிருந்துப் பெறப்படும் உணவினைச் சேர்ப்பது (TASF) என்பது 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊட்டச் சத்து இலக்குகளை அடைவதற்கான பல முயற்சிகளுக்கு முக்கியப் பங்களிப்பினை வழங்கும்.
புரதம், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற பேரூட்டச் சத்துக்களின் வளமான ஆதாரமாக நிலவாழ் விலங்குகளிலிருந்து பெறப் படும் உணவு உள்ளது.
நிலவாழ் விலங்குகளிலிருந்துப் பெறப்படும் உணவினை உட்கொள்ளுவது இரும்பு மற்றும் வைட்டமின் A போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கூடும்.
உலகளவில், மொத்தக் கலோரி வழங்கீட்டில் 21 சதவீதம் ஆனது பல்வேறு நிலம்வாழ் விலங்குகளிலிருந்துப் பெறப்படும் உணவிலிருந்து பெறப்படுகிறது.
இந்த அளவானது, ஐரோப்பாவில் (37 சதவீதம்) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் (30 சதவீதம்) அதிகமாக உள்ளது, ஆனால் ஆப்பிரிக்காவில் இது 11 சதவீதமாக மட்டுமே உள்ளது.