TNPSC Thervupettagam

ஆரோக்கியமான உணவு முறைகளில் இறைச்சி

May 5 , 2023 441 days 291 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பானது சமீபத்தில் “மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியப் பயன்களுக்கான ஆரோக்கியமான உணவுகளில் பல்வேறு நிலம்வாழ் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவின் ஒரு பங்களிப்பு” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • ஊட்டச்சத்துக் குறிகாட்டிகளின் போக்குகள், 2025 ஆம் ஆண்டிற்குள் அடைவதெற்கென உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட பல உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை அடைவதற்கான ஒரு பாதையில் உலகம் தற்போது இல்லை என்பதைக் காட்டுகிறது.
  • ஆரோக்கியமான உணவு முறைகளுக்குள், நிலவாழ் விலங்குகளிலிருந்துப் பெறப்படும் உணவினைச் சேர்ப்பது (TASF) என்பது 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊட்டச் சத்து இலக்குகளை அடைவதற்கான பல முயற்சிகளுக்கு முக்கியப் பங்களிப்பினை வழங்கும்.
  • புரதம், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற பேரூட்டச் சத்துக்களின் வளமான ஆதாரமாக நிலவாழ் விலங்குகளிலிருந்து பெறப் படும் உணவு உள்ளது.
  • நிலவாழ் விலங்குகளிலிருந்துப் பெறப்படும் உணவினை உட்கொள்ளுவது இரும்பு மற்றும் வைட்டமின் A போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கூடும்.
  • உலகளவில், மொத்தக் கலோரி வழங்கீட்டில் 21 சதவீதம் ஆனது பல்வேறு நிலம்வாழ் விலங்குகளிலிருந்துப் பெறப்படும் உணவிலிருந்து பெறப்படுகிறது.
  • இந்த அளவானது, ஐரோப்பாவில் (37 சதவீதம்) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் (30 சதவீதம்) அதிகமாக உள்ளது, ஆனால் ஆப்பிரிக்காவில் இது 11 சதவீதமாக மட்டுமே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்