TNPSC Thervupettagam

ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் ஆற்றலை வெளிக்கொணர்தல்

September 24 , 2024 60 days 89 0
  • உலக வங்கியானது, "மிகவும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் ஆற்றலை வெளிக் கொணர்தல்: மக்கள்தொகை மாற்றம், தொற்றா நோய்கள் மற்றும் மனித மூலதனம்" என்ற தலைப்பிலான ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • சுமார் 150 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றவும், 2050 ஆம் ஆண்டிற்குள் மில்லியன் கணக்கான உயிர்களை நீட்டிக்கச் செய்யவும் ஆரோக்கியமான ஒரு நீண்ட ஆயுளை ஊக்குவிப்பதில் மிக துணிச்சலான நடவடிக்கைக்கான சாத்தியத்தை இது எடுத்துக் காட்டுகிறது.
  • நூற்றாண்டின் நடுப்பகுதியில் மூன்றில் ஒருவர் 60 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பார் என்பதால், மிகக் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் விரைவான மக்கள்தொகை மாற்றங்களின் மீது இது கவனம் செலுத்துகிறது.
  • தொற்றா நோய்கள் (NCDs) ஆனது ஏற்கனவே இந்தப் பிராந்தியங்களில் சுமார் 70% உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன.
  • உலக வங்கி ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 1.5 பில்லியன் மக்களுக்கு சிறந்த சுகாதாரச் சேவைகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்