ஆரோக்கியம் மற்றும் சுகாதார நலனில் சம பங்கு உழைப்பு அறிக்கை
March 31 , 2024 238 days 355 0
உலக சுகாதார அமைப்பானது ‘ஆரோக்கியம் மற்றும் சுகாதார நலனில் சமபங்கு உழைப்பு : பாலினம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நலனில் சமபங்கு உழைப்புகளின் மதிப்புக் குறைப்பு’ என்ற தலைப்பிலான அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.
உலக சுகாதாரம் மற்றும் சமூகப் நலப் பணியாளர்களில் 67 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
76% பெண்கள் ஊதியம் கிடைக்கப் பெறும் வேலைகளோடுச் சேர்த்து, ஊதியம் கிடைக்கப் பெறாத பல்வேறு இதர பராமரிப்பு நடவடிக்கைகளிலும் பணி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில்சராசரியாக, ஆண்களின்வருவாயில் 30-40 சதவீதமானது குடும்ப நலனுக்காக ஒதுக்கப் படுவதுடன் ஒப்பிடுகையில், பெண்களின் வருவாயில் 90 சதவீதமானதுஅவர்களது குடும்ப நலனுக்காகவே ஒதுக்கப்படுகிறது.
இந்தியாவில், பெண்கள் தங்களின் மொத்த தினசரி வேலை நேரத்தில் சுமார் 73 சதவீத நேரத்தினை ஊதியம் கிடைக்கப் பெறாத வேலைகளில் செலவிடுகிறார்கள்.
ஆனால் ஆண்கள் தங்கள் தினசரி வேலை நேரத்தில் சுமார் 11 சதவீதத்தை மட்டுமே ஊதியம் கிடைக்கப் பெறாத வேலையில் செலவழித்தனர்.