TNPSC Thervupettagam

ஆரோக்கிய பச்சா – மரபணு குறிமுறை கண்டுபிடிப்பு

July 21 , 2019 1956 days 761 0
  • கேரள பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கிய பச்சா மரபணு அமைப்பின் (ட்ரைச்சோபஸ் சேலனிகஸ்) குறிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.
  • இது அகஸ்திய மலையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவத் தாவரமாகும்.
  • இந்த அதிசயத் தாவரமானது களைப்பை எதிர்த்துப் போராடுவதற்காக காணிப் பழங்குடியின சமூகத்தினால் பயன்படுத்தப் படுகின்றது. இது தனது பாரம்பரியப் பயன்பாட்டிற்காக அறியப்படுகின்றது.
  • இந்தத் தாவரமானது எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றி, பாலுணர்வுத் தூண்டி, அழற்சி எதிர்ப்பு, நோயெதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு, வயிற்றுப் புண் எதிர்ப்பு, குருதிக் கொழுப்பு மிகை எதிர்ப்பு, கல்லீரல் பாதுகாப்பு மற்றும் நீரிழிவு நோய் எதிர்ப்புப் பண்புக் கூறுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்