TNPSC Thervupettagam

ஆர்க்டிக்கில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்பக்

February 1 , 2019 1996 days 622 0
  • இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக் எதிர்ப்பைக் கொண்ட சூப்பர்பக் மரபணுவானது உலகின் கடைசியான அச்சுஅசலான இயற்கையைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றான ஆர்க்டிக்கில் கண்டறியப்பட்டிருக்கின்றது.
  • இக்கண்டுபிடிப்பு உலகளாவிய ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் பரவுதலுக்கான மிகப்பெரிய விளைவுகளைக் கொண்டிருக்கின்றது.
  • ஸ்வால்போர்டு பகுதியில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் blaNDM-1 (New Delhi Metallo-beta-lactamase-1) என்று அறியப்படும் புது தில்லி மெத்தலோ பீடா லாக்டமாஸ் 1 என்ற மரபணுவின் பரவுதலை ஆர்க்டிக் பிராந்தியத்தின் உயர்பகுதியில் தற்போது உறுதிப்படுத்தியிருக்கின்றன.
  • ஸ்வால்போர்டு என்பது வடதுருவத்திற்கும் நார்வேயின் மையநிலப்பகுதிக்கும் நடுவேயுள்ள நார்வே நாட்டைச் சார்ந்த ஒரு தீவுக்கூட்டமாகும்.
  • இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பு மரபணுவானது நுண்ணுயிரிகளில் பல மருந்து எதிர்வினையை ஏற்படுத்துகின்றது.
  • பலவகைப்பட்ட பாக்டீரியாக்களில் எதிர்ப்புத் தன்மையை அளிக்கும் புரதமான NDM-1 என்பது இதற்கு உதாரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்