ஆர்க்டிக் துந்த்ரா பகுதியானது தற்போது, வெப்பப் பிடிப்பு பசுமை இல்ல வாயுக்களின் (GHGs) மூல ஆதாரமாக மாறியுள்ளது.
அதிகரித்த காட்டுத்தீ மற்றும் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை ஆகியவை இந்த ஆர்க்டிக் சுற்றுச்சூழலின் வியத்தகு மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகும்.
தாவர மற்றும் விலங்கு எச்சங்கள் அதன் நிரந்தர உறைபனியின் ஓர் அடுக்கில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சிக்கிக் கொள்ளலாம்.
ஆர்க்டிக் மண் பகுதி முழுவதும் 1.6 டிரில்லியன் மெட்ரிக் டன் கார்பனை சேமிக்கிறது.
இது வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் இருமடங்காகும்.
2024 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான வருடாந்திர மேற்பரப்பு காற்று வெப்ப நிலை 1900 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிகவும் அதிக வெப்பமானதாக இருந்தது.