இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்து, நீரில் ஆர்செனிக்கின் அளவை கண்டறியவும் அதை நீக்கவும் ஆர்செனிக் உணர்வி மற்றும் வெளியேற்றும் ஊடகத்தை உருவாகியுள்ளது. இந்த ஊடகம் நீரைப் பாதுகாப்பானதாக மாற்றுவதுடன் வீடுகளில் பயன்படுத்தப்படக் கூடியதாகவும் உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதியளிக்கப்பட்ட ஆர்செனிக் அளவானது நிலத்தடி நீருக்கு1 மில்லி கிராம்/லிட்டர் ஆகும். இந்தியாவில், இந்த அளவு சமீபத்தில் இந்திய தர நிர்ணய ஆணையத்தால் (Bureau of Indian Standards -BIS) 0.05 மில்லி கிராம் /லிட்டர் இருந்து 0.01 மில்லி கிராம் /லிட்டர் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஆர்செனிக், அதன் கனிம வடிவில் அதிக நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும்.