ஆர்டிக் கடலின் பனி கணித்ததை விட வேகமாக உருகி வருகிறது.
October 30 , 2017 2583 days 897 0
பனிமண்டலக் காலநிலை ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, ஆர்டிக் கடலின் உறைபனி கணித்ததை விட வேகமாக உருகி வருகிறது.
ஆர்டிக் கடலின் பனியானது காலநிலை மாற்றத்தின் முக்கியக் குறியீடாகும்.
உருகுவதால் குறைந்து வரும் உறைபனி மூடலானது உறைபனியின் மீது பட்டு வளிமண்டலத்திற்கு எதிரொலிக்கும் சூரியக்கதிர்களின் அளவில் குறைப்பையும், சூரியக்கதிர்களின் உட்கிரகித்தலையும் அதிகரிக்கும்.
இது எல் –நினோ போன்ற வானிலை நிகழ்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பெருங்கடல்களின் வெப்பமடைதலை விரைவுப்படுத்தும்.
எல்-நினோ ஆசியாவிற்கான பருவக்காற்றில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
உருகி வரும் பனியானது, பனிக்கரடிகள், நீர் நாய்கள் மற்றும் மிதவைத்தாவர நுண்ணுயிர்கள் போன்றவற்றின் உயிர்வாழ்தலுக்கான சூழலை கடினமாக்கிவிடும்.
உப்புப்பனி அமைந்திருப்பதன் காரணமாக,பல ஆண்டுகளாக ஆர்டிக் கடல் பனியின் தடிமன் 25% என்ற அளவிற்கு செயற்கைக்கோள் அளவீடுகளால் அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உப்புப் பனியானது செயற்கைக்கோளிலிருந்து வரும் தொலையுணர்வு ரேடார் அலைகளை ஊடுருவ அனுமதிக்காத காரணத்தால் முரண்பாடான அளவீடுகளுக்கு வழிவகுக்கிறது.