கனடா தனது முதல் நிரந்தரமான, ஆண்டு முழுவதும் பயன்படுத்தத்தக்க ஆர்டிக் பெருங்கடலுக்கான முதல் நெடுஞ்சாலையை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.
இந்தப் புதிய நெடுஞ்சாலை இணைப்பின் மூலம் கனடா அதன் மூன்று கடற்கரைகளான அட்லாண்டிக், ஆர்டிக், பசுபிக் என அனைத்து கடற்கரைகளுடனும் நிலம் வழியாக இணைக்கப்படும்.
138 கி.மீ. (85 மைல்கள்) நீளமுடைய இந்த அனைத்து வானிலைகளிலும் பயன்படுத்தத்தக்க நெடுஞ்சாலை கனடாவின் யுகோன் பகுதியில் தொடங்கி வடகடலோர எல்லை வரை அமைந்துள்ளது.
இந்தப் புதிய நெடுஞ்சாலையானது இதற்கு முன் வான் வழியாக அல்லது பனிக்கால சாலைகள் வழியே மட்டுமே அடையத்தக்க நிலையிலிருந்த ஆர்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கனடாவின் டுக்டோயக்டுக் எனும் குக்கிராமத்தை தென்கனடியப் பகுதிகளுடன் இணைக்க வல்லது.