தேசிய விண்வெளிப் பயணம் மற்றும் விண்வெளி நிர்வாகத் திட்டம் அல்லது நாசா தனது ஆர்டிமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மீது வெள்ளையர் அல்லாத முதலாவது நபரை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, நாசா அத்திட்டத்தின் கீழ் நிலவின் மீது ஒரு பெண்ணையும் முதல் முறையாக அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
ஆர்டிமிஸ் திட்டம் என்பது ஒரு மனிதனின் சர்வதேச விண்வெளிப் பயணத் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் 2024 ஆம் ஆண்டிற்குள்ளாக நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஒரு மனித விண்வெளிப் பயணத்தைச் செலுத்துவது என்பதாகும்.