சந்திரனை நோக்கிய ஆய்வுப் பயணத்தில் இதுவரையில் உருவாக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த ஏவுகலத்தினை நாசா விண்ணில் ஏவ உள்ளது.
இந்த ஏவுதலானது, அமெரிக்க விண்வெளி முகமையின் ஆர்ட்டெமிஸ் என்ற புதிய முதன்மைத் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த 32 அடுக்கு உயரமான விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) விண்ணில் ஏவப்பட்டது.
ஆர்ட்டெமிஸ் 1 என்ற ஒரு கலத்தின் உச்சியில் விண்வெளி வீரர்கள் அற்ற ஓரியன் விண்கலம் பொருத்தப் பட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் 1 கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டப் பிறகு, ஆர்ட்டெமிஸ் 2 கலமானது, 2024 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்களுடன் நிலவினை நோக்கி விண்ணில் ஏவப்படும்.
அதே சமயம் ஆர்ட்டெமிஸ் 3 கலமானது 2025 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே சந்திர மண்ணில் தடம் பதிக்கும்.