TNPSC Thervupettagam

ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் புதிய நாடுகள் இணைவு

June 13 , 2024 164 days 191 0
  • ஸ்லோவாக்கியா மற்றும் பெரு ஆகிய நாடுகள் விண்வெளியில் பாதுகாப்பான ஆய்வை மேற்கொள்வதற்கான அமெரிக்க நாட்டின் தலைமையிலான நாசாவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த இரு நாடுகளின் இணைவினால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் மொத்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
  • ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கைகள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்ட போது அமெரிக்கா உட்பட எட்டு நாடுகள் அதில் கையெழுத்திட்டன.
  • இது பொதுவான ஆய்வு மற்றும் விண்வெளி, நிலவு, செவ்வாய், வால் நட்சத்திரங்கள் மற்றும் குறுங்கோள்கள் ஆகியவற்றை அமைதியான பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கானப் பொதுவான கொள்கைகளை நிறுவுவதை பெரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்