ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாட்டின் அதிகாரிகள், அவற்றிற்கு இடையேயான சுமார் 40 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு சமாதான ஒப்பந்தத்தின் உரைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், நாகோர்னோ-கராபாக் என்ற அப்பகுதியானது ஆர்மேனியாவின் ஆதரவுடன் அஜர்பைஜானிலிருந்து பிரிந்தது.
அஜர்பைஜானில் உள்ள இந்தப் பகுதியில், அந்த நேரத்தில் ஆர்மேனிய இன மக்கள் தொகை பெரும்பான்மையாக இருந்தது.
இரு நாடுகளுக்கு இடையிலான சுமார் 1,000 கிலோ மீட்டர் (621 மைல்) பகிரப்பட்ட அந்த எல்லை மூடப்பட்டு பெரிய அளவில் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.