சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்ட உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஒரே தங்கப் பதக்கத்தை (18 வயதுக்குட்பட்டோர் பிரிவில்) சென்னையைச் சேர்ந்த ஆர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் 8 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியனாகவும் 2015 ஆம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியனாகவும் இருந்த பிரக்ஞானந்தாவுக்கு இது மூன்றாவது உலகப் பட்டமாகும்.
இவர் 2016 ஆம் ஆண்டில் உலகின் முதலாவது இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனார்.
செர்ஜி கார்ஜகின், D குகேஷ் மற்றும் ஜவோகிர் சிந்தாரோவ் ஆகியோருக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற நான்காவது இளம் நபர் இவராவார்.