ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் (Iranian) ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆறாவது இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு (Indian Ocean Naval Symposium-IONS) நடைபெற்றுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் உறுப்பு நாடுகளும், காஸ்பியன் கடலின் கரையோர நாடுகள் (Caspian Sea littoral states) போன்ற பிற சில கடற்கரையோர நாடுகளும் பங்குபெற்றன.
இந்த சர்வதேச கருத்தரங்கு நிகழ்வில், இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் தலைவராக ஈரானிய கடற்படை இரண்டு ஆண்டுக் காலத்திற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.
இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கானது பிராந்திய அளவில் தொடர்புடைய கடல்சார் பிரச்சினைகளின் விவாதிப்பிற்கு ஓர் திறந்த மற்றும் உள்ளடக்கு மன்றத்தை வழங்குவதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (littoral states of the Indian Ocean Region) கடற்கரையோர நாடுகளின் கடற்படைகள் இடையே கடல்சார் ஒத்துழைப்பினை (maritime co-operation) அதிகரிக்க முனையும் ஓர் தன்னார்வ முயற்சியாகும் (voluntary initiative).