TNPSC Thervupettagam

ஆறாவது பெரும் அழிவு

June 10 , 2020 1633 days 728 0
  • தற்போது நடந்துக் கொண்டிருக்கும் ஆறாவது  பெரும் அழிவானது நாகரிகத்தின் நிலைத்தன்மைக்கு மிகவும் கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கலாம்.
  • இந்த ஆராய்ச்சியானது  அமெரிக்காவின் தேசிய அறிவியல் கல்விக் குழுமத்தின் செயல்முறைகள் இதழில் (Journal Proceedings of the National Academy of Sciences) வெளியிடப் பட்டுள்ளது.
  • பெரும் அழிவு என்பது அழிவின் மீதான அளவின் கணிசமான அதிகரிப்பு அல்லது புவியியல் ரீதியாக குறுகிய காலத்தில் பூமி அதன் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட உயிரினங்களை இழப்பதைக் குறிக்கிறது.
  • இதுவரை, பூமியின் முழு வரலாற்றிலும் ஐந்து பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
  • கடந்த 450 மில்லியன் ஆண்டுகளில் நிகழ்ந்த ஐந்து பெரும் அழிவுகள் முன்பு இருந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் 70-95 சதவீத உயிரினங்களை அழிக்க வழிவகுத்தன.
  • தற்போது நடந்துக் கொண்டிருக்கும் ஆறாவது ஒன்று, மானுடச் செயல்களால் ஏற்படும் அழிவு என குறிப்பிடப் படுகிறது.
  • உயிரினங்களின் இழப்பு நிரந்தரமானதாக இருக்கும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இதை மிகவும் கடுமையான ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினைஎன்று குறிப்பிட்டு உள்ளனர்.
  • மனித குலத்தின் மூதாதையர்கள் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை உருவாக்கியதிலிருந்து உயிரினங்களின் இழப்பு ஏற்பட்டு வருகின்றது.
  • இதில் வெப்பமண்டலப் பகுதிகள் அதிகமாகக் குறைந்து வரும் உயிரினங்களைக் கண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்