TNPSC Thervupettagam

ஆறு அபாச்சே ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்திய ராணுவம்

August 19 , 2017 2525 days 884 0
  • 4,168 கோடி ரூபாய் செலவில் இந்திய இராணுவத்திற்கு ஆறு அபாச்சே ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்திற்குப் பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆறு அபாச்சே AH-64E ரக ஹெலிகாப்டர்களும் துணை உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களோடு சேர்த்து வாங்கப்படும்.
  • இந்தியாவுக்கு வழங்குவதற்காக ரஷ்யாவில் இரண்டு அட்மிரல் க்ரிகோரோவிச் ரக கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பொருத்துவதற்காக உக்ரைனில் இருந்து இரண்டு எரிவாயு விசையாழிகளை வாங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவானது மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • தற்போது ரஷியாவின் Mi-25 மற்றும் Mi-35 ரக ஹெலிகாப்டர்கள் இந்தியக் கடற்படை இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்