TNPSC Thervupettagam

ஆற்றல் செயல்முறை அறிக்கை

June 1 , 2020 1547 days 766 0
  • ஆற்றல் செயல்முறை அறிக்கையானது சர்வதேச ஆற்றல் நிறுவனம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம், ஐக்கிய நாடுகள் புள்ளியியல் பிரிவு, உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு எண் 7 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் உலகம் தழுவிய விலை குறைவான, நம்பத்தகுந்த, நீடித்த மற்றும் நவீன ஆற்றல் அணுகலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, உலக அளவில் மின்மயமாக்கல் விகிதச் செயல்பாடானது 2010 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை நிலையான அளவில் அதிகரித்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டில் 83%லிருந்து 2018 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 90% ஆக அதிகரித்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில், மின்சார அணுகல் தொடர்பாக மிகப்பெரிய பற்றாக்குறை உள்ள முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 
  • நைஜீரியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் இந்தியா ஆகிய 3 மிகப்பெரிய பற்றாக்குறையுள்ள நாடுகள் முறையே 85 மில்லியன், 68 மில்லியன் மற்றும் 64 மில்லியன் மக்களுக்கு மின் பற்றாக்குறையைக் கொண்டு உள்ளன.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்